மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்..!
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் T.B சரத் அவர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இன்றையதினம் 03-09-2025ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின்
வீடமைப்பு,மின்சாரம்,நீர்வழங்கல், கண்ணிவெடியகற்றல் உட்பட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் பணிப்பாளர் மீள்குடியேற்ற அமைச்சு,திட்டமிடல் பணிப்பாளர் மீள்குடியேற்ற அமைச்சு, மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகங்களின் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர்கள், கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் ம.மோகன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


