ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கடமையேற்பு..!
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி வனஜா செல்வரெட்ணம் அவர்கள் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றார்.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.
மேலும் இன்றைய தினமே ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


