மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு Halo Trust நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது..!

மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு Halo Trust நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது..!
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்

Halo Trust நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வினை சிப்பா (Centre for Poverty Analysis) நிறுவனம் மேற்கொண்டுவருவதற்கு அமைவாக அதன் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் திரு மொஹட் முனாஸ் அவர்கள் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், Halo Trust நிறுவனம் 2002 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருவதாகவும், மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடிகள் இல்லை என்ற உறுதிப்படுத்தல்களை வழங்கிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், யாழ்ப்பாண மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு நிறுவனத்தின் பங்களிப்பு க்கள் காத்திரமாக அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டு, அதன் பின்னரான செயற்பாடுகளையும் விபரமாக எடுத்துக் கூறினார்.

இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Recommended For You

About the Author: admin