“செயிரி வாரம்” செயற்படுத்துதல்.

கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” செயற்படுத்துதல்.

அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலாளர்களின் தலைமையில் பிரதேச செயலகங்களில் நடைபெற்றது.

அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு தமது கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் நிறைவேற்றுவதற்கு உகந்த வகையில் சுத்தமானதும், சுகாதார பாதுகாப்புள்ளதுமான, ஆபத்துக்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு நிறுவனத் தலைவரினதும் பொறுப்பாகும். அத்தகைய சூழல் சேவைப்பெறுநர்களின் மத்தியிலும் அலுவலகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும் வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும்.

அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக “செயிரி வாரம்” பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இந்நிகழ்ச்சித்திட்டமானது திருகோணமலை பிரதேச செயலகங்களிலும் செயற்றபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் தினத்திலிருந்து 04 ஆம் தினம் வரையில் அமுல்படுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin