தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு..!

தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு..!

தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை (NVQ – 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் தகமைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் ஜயசூரியன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அதிசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்த நிகழ்வினை மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சிவகுமார் ஒழுங்கமைத்திருந்தார்.

மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன் இலவசமாக வழங்கப்பட்ட (NVQ – 3) சான்றிதழினை அறுபதிற்கு மேற்பட்ட மின்னியலாளர்களும், தொழில்சார் தகமைக்கான அடையாள அட்டையினை 20 மின்னியலாளர்களும் அதிதிகளின் கரங்களினால் பெற்றுக்கொண்டதுடன், அதிதிகள் தமது உரையின் போது இவர்களை பாராட்டியிருந்தனர்.

மின்சாரத்தினால் ஏற்படும் மரணங்களை தவிர்க்கும் நோக்கிலேயே குறித்த செயற்றிட்டத்தினை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்னெடுத்துவருகின்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக திறன் விருத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலத்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin