முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் சட்ட மீறல் வழக்கு, எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பதுளை நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவிட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பதுளையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டது.

