கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9.00மணிக்கு ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிபர் G.தர்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே கலந்து சிறப்பித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட அரசாங்க அதிபர் S..முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளையும் பிரதியமைச்சர் அவர்கள் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து புதிய கற்கை நெறியான புதுப்பிக்க கூடிய சக்தி வளங்கள் தொடர்பான கற்கை நெறியினையும் ஆரம்பித்து வைத்தார்.


