நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் மூன்றாம் வருட நிறைவை முன்னிட்டு 26/08 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரியில் சமஷ்டி தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி மேற்படி செயற்திட்டம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதன் ஓர் அங்கமாக சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மேற்படி விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி திலீபன் சமஷ்டி முறைமை மற்றும் அதன் நன்மைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.
அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட “மக்கள் பிரகடனம்” என்ற நூலும் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

