2025 ஆம் ஆண்டுக்கான இற்றைவரையான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.08.2025) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள்,கடந்த வருட இறுதியில் நிதி நடவடிக்கைகளை வினைத்திறனுடன் உரிய காலப்பகுதிக்குள் முடிவுறுத்த ஒருங்கிணைந்து செயற்பட்ட அனைவரும் நன்றிகளை தெரிவித்ததுடன், தொடர்ந்தும் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து திணைக்கள ரீதியாக நிதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன்
மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு .பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


