40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் – அமைச்சர் விமர்சனத்திற்கு பதிலளித்தார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“அவரது சமீபத்திய கைதுக்கான குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்று சிலர் வாதிடுகின்றனர்; அது உண்மைதான். இருப்பினும், அவரது 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் தேர்தலுக்குப் பிந்தைய பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. அந்த சம்பவத்திற்கு ரணிலும் ஜே.ஆர்.ரும் பொறுப்பு, அவர்கள் அப்போதே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

 

1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்களான 1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் மற்றும் 1983 ஜூலை கலவரங்கள் உட்பட அமைச்சரவையில் அவரது பங்கிற்காக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு கூறப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

“1987க்கும் 1990க்கும் இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பட்டலந்த சித்திரவதை இல்லம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார், இது தொடர்பான விசாரணைகள் சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு பிணை முறி மோசடியிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கு தெளிவாகத் தெரிந்தும், அந்த வழக்கிலும் எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

 

“எனவே, 40 ஆண்டுகளுக்கு முன்பே இன்னும் பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒரு நபர், விசாரணை அதிகாரிகள் எந்தத் தடையுமின்றி நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யக்கூடிய எங்கள் அரசாங்கத்தின் கீழ் இப்போதுதான் விசாரிக்கப்படுகிறார்,” என்று அவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: admin