சிறப்பாக இடம்பெற்ற கணித விழா கௌரவிப்பு..!
சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா – 2025 நிகழ்வு வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை (23.08.2025) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சிதம்பரா கணிதப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பனவற்றை வடக்கு ஆளுநர் வேதநாயகன் வழங்கி வைத்திருந்தார்.


