யாழில் மீட்கப்பட்ட T56ரக துப்பாக்கிகள்..!

யாழில் மீட்கப்பட்ட T56ரக துப்பாக்கிகள்..!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலுள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin