நல்லூர் ஆலய தேர்த்திருவிழா..!
21.08.2025
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.
அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் காலை 7.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
காலை 8.30 மணிக்கு இருப்பிடத்தை அடைந்த தேர், காலை 09.15 மணியளவில் ஆறுமுக பெருமானுக்கு பச்சை சாத்தி பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 10.30 மணிக்கு ஆறுமுக பெருமான் ஆலயத்திற்குள் சென்றார்


