கல்வி அபிவிருத்தி குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி..!
இலங்கை மற்றும் இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களுடைய என்.வி.கியூ -4 தர மேற்படிப்பிற்கு முதற்கட்டமாக எட்டு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொட்டகல தோட்டக் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மைவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வின் ஓர் அங்கமாகவே லண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமத்தைச் சேர்ந்த வைத்தியக்கலாநிதி கலாநிதி எஸ்.நவரட்ணம் அவர்கள் மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்பிற்காக எட்டு இலட்சம் ரூபாய் நிதியினை தோட்டக் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்திடம் நன்கொடையாக வழங்கி வைத்திருந்தார்.
தோட்டக்கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன ஆசிரியர் பயிற்சிக்கான விரிவுரையாளர் செல்வி அ.சண்முகவடிவு தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்,
இலங்கை மற்றும் இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமக் காப்பாளர் ந.சச்சிதானந்தன், இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமத்தைச் சார்ந்த வைத்தியக்கலாநிதி நவரட்ணம்,
தோட்டக் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஆர்.ஜோக்கிம்,
தோட்டக் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.கருணாகரன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


