கொழும்பு – பேலியகொட மீன் சந்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொழும்பு – பேலியகொட மீன் சந்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

இன்று காலை (19) பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அளுத்மாவத்தை, கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அய்யப்பன் பிரபு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலை 9:30 மணியளவில் பரபரப்பான மீன் சந்தைக்கு அருகில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவம் நடந்த இடத்தில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த தாக்குதலுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நிலவி வந்த நீண்டகால பகை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீன் சந்தை ஊழியர் ஒருவரே இலக்கு வைக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை குழுக்கள் பல விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. மேலதிக தகவல்கள் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் தெரியவரும்.

Recommended For You

About the Author: admin