திருட்டுப் போன பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது..!

திருட்டுப் போன பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது..!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சாவகச்சேரிப் பொலிஸார் 17/08 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி மடத்தடியில் ஆட்கள் இல்லாத வீடொன்றிற்குள் நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடி குடத்தனை பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருட்டுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin