செம்மணி படுகொலை வழக்கு: சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்;

செம்மணி படுகொலை வழக்கு: சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்; சம்பவ இடத்திலேயே வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அச்சுறுத்தல் விடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று (14) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இ

தன்போது, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட சாட்சியாளர்கள், CID அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதாக வாதிட்டனர்.

சட்டத்தரணிகளின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நீதவான், CID அதிகாரிகள் சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய விரும்பினால், அதனை சம்பவ இடத்திலேயே மற்றவர்களின் முன்னிலையில் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: admin