ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன்..!

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன் அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன் என பிரபல பாடகர் மனோ தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(15.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி எமது இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மக்களையும் , நல்லூர் திருவிழாவிற்காக வந்துள்ள புலம்பெயர்கள் தமிழர்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்வை நடத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin