இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது.
மண்ணெண்ணெய், விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த சரிவை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இறைச்சி, கோழி மற்றும் முட்டை போன்ற புரத அடிப்படையிலான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இந்த, நிலையில், இது மீன்பிடிக்கான பருவம் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் எரிபொருள் விநியோகமும் சீராகியுள்ளதால், மீன்களின் விலை குறைந்துள்ளது என்று இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் டபிள்யூ டி யசந்த தெரிவித்தார்.
ஏறக்குறைய, ஒரு வருடத்தில் விலை வீழ்ச்சியடைவது இதுவே முதல் தடவை என்றும் யசந்த கூறினார். இன்று, பெரும்பாலான மீன் விலைகள் 20 சதவீதத்தால் குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், தலபத் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதே நேரத்தில் கெல்ல வல்லா 1,500 ரூபாவாக இருந்தது. முன்னர் இந்த இரண்டு வர்க்க மீன்களும் கிலோ ஒன்று 3,000 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டன.
அத்தத்துடன், சாலயா ஒரு கிலோ கிராம் 540 ரூபாய்க்கும், ஹூருல்லோ 520 ரூபாய்க்கும், லின்னா 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இவை, அனைத்தும் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட விலையைவிட இன்று பாதிக்குக் பாதி குறைவாகவே விற்கப்பட்டன.