மேலுமொரு வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன் முறையாக முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் சமீபத்தில் மேலுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சாதாரண குறைப் பிரசவத்தில் (6 மாதம்) மிகவும் நிறை குறைந்த (500 கிராம் ) முதலாவது பெண் குழந்தை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இக் குழந்தை கடந்த 84 நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் மிகுந்த கண்காணிப்பின் கீழ் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு 04.08.2022 அன்று 1.450 கிலோ கிராம் நிறையுடன் குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் வீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய சாதனையை புரிந்து வைத்தியசாலைக்கு பெருமை சேர்த்த முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவு வைத்தியநிபுணர், குழந்தைநல வைத்திய நிபுணர், நுண்ணுயிரியல் வைத்தியநிபுணர், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor