இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் (SLFEA) உதவி முகாமையாளர் ஒருவர், 1,050,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கடுமையான பூச்சிய சகிப்புத்தன்மை கொள்கையை பேணுவதாகவும், வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கவும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

