பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு..!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முரண்பாடு ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அதன்படி, எதிர்க்கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளது.

Recommended For You

About the Author: admin