யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள ஜனாதிபதி அனுர..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அநுரகுமார திஸாநாயக்க , ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில் முக்கிய பல அபிவிருத்தித் திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளையும் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

இதன் ஆரம்பகட்டமாக யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறைமுகத்தை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி யாழ். விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அத்துடன், காரைநகர் உட்பட யாழில் கரையோரப் பகுதிகளில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பல திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. மேலும் யாழ். விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார பல சந்திப்புகளையும் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin