பிரதமர் ஹரிணியின் கதிரை பத்திரமாம்.!

தேசிய மக்கள் சக்தியினில் உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது.பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முற்பட்டுள்ள நிலையில் 54வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமரை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் அரசாங்கம் வீழ்ந்துவிடாது.

எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் கட்டி எழுப்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி பல சிவில் அமைப்புக்களை தேர்தல் களத்தில் ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தியாக பரிணமித்திருந்தது.

எனினும் அண்மையக்காலமாக ஜேவிபி தனது ஆதிக்கத்தை கட்சியினுள் செலுத்த முற்பட்டதையடுத்து உட்கட்சி பிளவு மூண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin