காசாவின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றுவது பற்றி இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை வன்முறையை மேலும் அதிகரிக்கும் மற்றும் காசாவின் மக்களின் துன்பத்தை மோசமாக்கும் என்று இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
அமைச்சு உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், அனைத்து தரப்பினரும் நீடித்த அமைதியை
அடைவதற்காக இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தமது கருத்து வேறுபாடுகளை தீர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.


