நாளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளனர்

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை, ஞாயிற்றுக்கிழமை (10) நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு, 23,1638 சிங்கள மாணவர்களும், 76,313 தமிழ் மாணவர்களும் உட்பட மொத்தம் 307,959 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் வினாத்தாள் காலை 11:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரையிலும், இரண்டாம் வினாத்தாள் காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரையிலும் நடைபெறும்.

Recommended For You

About the Author: admin