நேற்று (08) பலாங்கொடை, ரத்னங்கொல்ல–இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து, பம்பி பக்கெட் (Bambi bucket) வான்வழி நடவடிக்கைகளை நடத்தி தீ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

