சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் முன்மாதிரியான செயல்..!

சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் முன்மாதிரியான செயல்..!

சாவகச்சேரி நகரசபை உறுப்பினரும்-நகரசபையின் சுகாதாரக் குழுத் தலைவருமான வ.பிரகாஸின் முதலாம் மாத நகரசபைக் கொடுப்பனவு மூலம் இன்றையதினம்( 06.08 .2025) புதன்கிழமை தென்மராட்சி-கல்வயல் ஸ்ரீ சண்முகானந்த வித்தியாலயத்திற்கு குப்பைகளை தரம் பிரித்து இடும் கழிவு தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையம் முன்னெடுத்து வரும் “இது எமது உலகம் “எனும் செயற்திட்டத்தின் கீழ் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் பிரகாஷ்,முன்னாள் நகரசபை உறுப்பினர் நடனதேவன் மற்றும் சமுக செயற்பாட்டாளர் கணேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin