பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன, வலனை ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

 

அதன் பின்னர், அவர் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில், சர்ச்சைக்குரிய ஜீப் பரிவர்த்தனை குறித்து வலனை மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

 

போலித் தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் மாத்தறை நகர்ப்பகுதியில் ஓட்டப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கடந்த ஜூலை 19ஆம் திகதி பிற்பகல் அந்தப் பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பந்தப்பட்ட ஜீப்புடன், அதனை ஓட்டிச் சென்ற சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ராசிக விதான ஆவார்.

 

அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பில், குறித்த வாகனம் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு, போலித் தரவுகளை சமர்ப்பித்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin