“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..!
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (28) இடம் பெற்றது.
பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் “மட்டு முயற்சியான்மை” எனும் கண்காட்சியும் விற்பனையும் இன்று காலை முதல் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் குறித்த விற்பனை கண்காட்சியை பார்வையிட வந்ததுடன் பொருட்களையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்திருந்தனர்.
இப் பிரதேச சிறு தொழில் முயற்ச்சியாளர்களை வலுப்படுத்துவதற்கு பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்களான திருமதி சுபா சதாகரன், திருமதி லக்சண்யா பிரசந்தன், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


