விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள்..!

விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள்..!

சிறிலங்காவின் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொணிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (25.07.2025) அன்று கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், விடுதலை நீர் கையளிப்பு, சிறைக்கூட உணர் கண்காட்சி ஆகியன இரு தினங்களாக நடைபெற்று வருவதோடு, தாயகத்தின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து விடுதலை நீர் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் போது மதத் தலைவர்கள், அரசியற் கட்சிச் செயற்பாட்டாளர்கள், அரசியற் கைதிகளின் குடும்பத்தினர், விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியற் கைதிகள், குடிமக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்குகொண்டிருந்ததோடு, விடுதலை நீர் கையளிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

கறுப்பு யூலைக் காலவரத்தின் போது சிறிலங்காவின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் இனவழிப்பின் அங்கமாக தமிழ் அரசியற் கைதிகள் படுகொலை நாட்களில், அவற்றினை நினைவுகூர்ந்து குறித்த “விடுதலை” கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமையும் நோக்கத்தக்கது.

Recommended For You

About the Author: admin