கட்டாரில் மரணமடைந்த இலங்கையர்களுக்கு ரூ. 8.3 கோடி இழப்பீடு!

கட்டாரில் மரணமடைந்த இலங்கையர்களுக்கு ரூ. 8.3 கோடி இழப்பீடு!

கட்டாரில் மரணமடைந்த இலங்கை நாட்டவர்களின் உறவினர்களுக்கு, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், டோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் ரூ. 8.316 கோடி மரண இழப்பீடாக பெற்றுள்ளது.

 

இந்தத் தொகையில், ரூ. 2.339 கோடி தூதரகத்தின் நேரடி முயற்சிகள் மூலம் உறவினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ. 5.98 கோடி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு மேலதிக விநியோகத்திற்காக மாற்றப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கான தீர்வுக் கொடுப்பனவுகளும் இதில் அடங்கும்.

 

இந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு, தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் ஆலோசகர் தர்மசிறி விஜேவர்தன ஆகியோர் கட்டார் நிறுவனங்கள், தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அரசு மற்றும் சட்டப் பங்காளர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், மரணமடைந்த இலங்கை நாட்டவர்களின் குடும்பங்களுக்கு தூதரகம் ரூ. 17.299 கோடி இழப்பீட்டைப் பெற்று விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin