விடுதலை நீர் சேகரிக்கும் பணி ஆரம்பம்..!

விடுதலை நீர் சேகரிக்கும் பணி ஆரம்பம்..!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இருந்து ஆரம்பித்திருக்கிறது.

 

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தும் வகையிலான அணி திரள் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக விடுதலை விருட்சம் நடப்பட உள்ளது. குறித்த விடுதலை வெளிச்சத்திற்கான நீர் சேகரிப்பு தாயக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தன்னார்வலர்கள் மற்றும் பொது அமைப்புகள் உங்கள் பிரதேசங்களில் விடுதலை விருட்சத்திற்கான நீரினை சேகரித்து கிட்டு பூங்காவில் இடம் பெறும் விடுதலை நிகழ்வில் கையளிக்க முடியும். மேலும் தங்கள் பிரதேசத்துக்கு வரும் நீர் சேகரிக்கும் வாகனத்திலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி ஒரு குவளை நீரை நீங்களும் வழங்க முடியும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin