உடனடியாக வெளியேறுங்கள்..!  தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம்

உடனடியாக வெளியேறுங்கள்..!  தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம்

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, உடனடியாக வெளியேறுமாறு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

 

தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சுகிர்தனால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

 

தையிட்டிஇறை, முத்துக்கலட்டி என்னும் பகுதியில், தனக்குச் சொந்தமான ஆதனத்தை, ஜின்தோட்ட நந்தராமதேரர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு புதிய கட்டுமானம் ஒன்றை அமைத்துவருகின்றார் என்று பொதுமகன் ஒருவர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

 

ஜின்தோட்ட நந்தராம தேரர்

 

இதையடுத்தே குறித்த பகுதிக்கு ஜின்தோட்ட நந்தராம தேரர் உரித்தாளர் என்றால் அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறும், இல்லையேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், அவ்வாறு வெளியேறாவிடின், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது கடிதத்தில் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin