சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!

‘Clean SriLanka’ எண்ணக்கருவின் செயற்பாடுகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(22) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ. உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களில் நிதி மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்திடும் நோக்கிலும் மாவட்டத்தில் உள்ள சமுர்த்திப் யனாளர்ளை சிறந்த முறையில் வழிப்படுத்தல், ஊக்கப்படுத்தல், வாழ்வாதாரத்தில் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தல், சமுர்த்தி வங்கியின் முக்கிய செயற்பாடுகள் முதலான விடயங்கள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

 

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் லிசோ கேகிதா, பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள்,துறைசார் உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin