கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்!

கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்!

குருநாகல் பிரதேசத்தில் உள்ள வயல்வெளி அருகே மரத்தடியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையைத் தத்தெடுக்க கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாவத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

 

கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இந்தக் குழந்தையைத் தத்தெடுக்க கோரி தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குழந்தையைத் தத்தெடுக்க கோரி அழைத்த அனைவருக்கும் அதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 

எனினும், நேற்று முன்தினம் காலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் குழந்தையின் தாய் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin