யாழ். போதனா வைத்தியசாலையில் உலக இருதய தினம்

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவின் எற்பாட்டில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கத்திற்கு எற்ப பழைய உணவுப் பழக்கவழக்கங்களைக் கையாண்டு இருதய நோயில் இருந்து முற்றாக நலம் பேறுவோம் என்னும் தொனிப்பொருளில் உலக இருதய தினம் நிகழ்வு இன்று யாழ். போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவின் நிபுணர் அச்சுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட வைத்தியகுழுவினர்கள் கலந்து சிறப்பித்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 08 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டவர்களின் இருதய சிகிச்சைக்காக தமது உயிரத்தை தானமாக்கி காப்பாற்றிய 10 தாதியர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி சான்றிதழ்களை வழங்கிவைத்தார்

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 10 வருடங்களில் 145 நபர்களுக்கு இருதயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு பூரணசுகத்துடன் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக 47 நபர்களுக்கு வழங்கப்பட்டது அவற்றில் 36 நபர்கள் பூரண சுகத்துடன் இருக்கின்றனர். அவற்றில் 11 நபர்களுக்கு அதிகூடிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

இதில் இரத்த வங்கியின் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor