முட்டை விலை குறைப்பு – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் பண்ணை விலை 28 ரூபாயில் இருந்து 26 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிவப்பு முட்டை ஒன்றின் பண்ணை விலை 30 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 29 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விலை 31 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

