கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா இன்று11.07.2025) காலை 9.00மணிக்கு நடைபெற்றது.
விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.
காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசணைக்கு அமைய குறித்த நெல்லினம் இவ்வாறு செய்கை பண்ணப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத் திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, வடமாகாண விவசாய மேலதிக பணிப்பாளர் த.யோகேஸ்வரன், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் வடமாகாண பணிப்பாளர் A.C.பாபு, யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பண்ணை முகாமையாளர்,
விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.


