நடுக்கடலில் திடீரென ஆபத்தில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் நால்வரை, இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஜூலை 6) பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
கொழும்பில் உள்ள தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வந்த அவசர தகவலுக்கு அமைய, கடற்படையினர் விரைந்து செயற்பட்டு, இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அருகாமையில் இருந்த இந்திய மீன்பிடி படகை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.
அந்தப் படகில் இருந்த நால்வர், இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் சிக்கி தவித்து வந்தனர்.
அவர்களை உயிருடன் மீட்ட இலங்கை கடற்படை, மனிதநேயத்துடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவந்தது.


