சர்க்கரை நோய் தீர்க்கும் இன்சுலின் தாவரம் வீட்டிலும் வளர்க்கலாம்?

சர்க்கரை நோய் தீர்க்கும் இன்சுலின் தாவரம் வீட்டிலும் வளர்க்கலாம்?

இன்சுலின் செடியை தொட்டியில் வைத்து வளர்க்க முடியும் . இதன் விதைகளை தேடிக் கொண்டிருக்க வேண்டாம் . மூன்று கணுக்கள் இருக்கும்படியான ஒரு தண்டை எடுத்து மண்ணில் சொருகி வைத்தால் போதும் , வளர ஆரம்பிக்கும் . இன்சுலின் மர வேர் பகுதியில் , கிழங்கு போல் முட்டு இருக்கும் . அந்த கிழங்கோடு ஒரு முதிர்ந்த குச்சி கிடைத்தால் நட்டு வையுங்கள் . ஒரே வாரத்தில் முளைப்பு வந்துவிடும் . தொட்டியில் இலகுவான சாதாரண மண் , இலை , தழைகள் , எரு உரம் போட்டு நன்றாக நீர் விட்டு வந்தால் போதும் . சில சமயம் எறும்புகள் , சிறுசிறு பூச்சிகள் இலைகளில் பட்டையாய் ஒட்டிக்கொள்ளும் . நல்ல தண்ணீரை பீய்ச்சி அடிக்க , அந்த பூச்சிகள் உதிர்ந்துவிடும் . மிக அதிமான தாக்குதல் இருந்தால் கிளையை கிள்ளி எறிந்து விடுங்கள் .

இதன் இலை மட்டுமல்ல , முழுத்தாவரமும் மருந்தாகத்தான் பயன்படுகிறது . இன்சுலின் என்பது , நம் உடலின் கணையத்திலிருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் . நம் ரத்தத்திலுள்ள உயர் சர்க்கரை அளவை குறைக்கிறது .

உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டால் , ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து , உடலில் பல பிரச்னைகள் ஏற்படத் துவங்கும் . இதன் ஒன்று அல்லது இரண்டு இலைகளை உட்கொண்டால் , கொலஸ்ட்ரால் அளவு குறைந்து , சர்க்கரையின் அளவும் குறையும் . நீரிழிவு , நரம்பியல் பிரச்னை , வயிற்றுப்புண் , வயிற்றுப்போக்கு , சளி , இருமல் ஆகியவற்றுக்கும் சிகிச்சையளிக்க , இன்சுலின் செடி இலைகள் பயன்படுகிறது . செரிமானத்தை மேம்படுத்துகிறது . சரும நோய் , இதய நோய் வராமல் தடுக்கிறது . மன அழுத்தத்தை போக்குகிறது . ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது . மூளை செல்களைப் பாதுகாக்கிறது . நோய் உள்ளோர் மட்டுமல்ல , ஆரோக்கியமானவர்களும் , இன்சுலின் செடியின் இலைகளை மென்று தின்றால் , பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என நிரூபிக்கப்பட்டுள்ளது .

ஆனால் , வாய் , உதடு , நாக்கு , தொண்டை அல்லது மூக்கைச் சுற்றி வீக்கம் , வாசனை பிடிக்காமல் மூச்சு விடுவதில் சிரமம் , காரத்தன்மையால் கண்கள் சிவந்து போதல் , சுவை பிடிக்காமல் வாந்தி ஏற்பட்டால் , உடனடியாக இலைகளை உட்கொள்வதை நிறுத்தி விடலாம் .

பயன்படுத்துவது எப்படி? கறிவேப்பிலை மற்றும் இன்சுலின் செடி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி , ஆற வைத்து தினமும் காலை , மாலை குடித்து வர , உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது . இஞ்சி , மஞ்சள் வகையை சேர்ந்தது என்பதால் , உணவிலும் இதை சேர்த்துக் கொள்ளலாம் . இதன் இலைச்சாறு , ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் , இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வையே குறைத்துவிடும் .

நிறைய இலைகள் கிடைக்கும் போது , நன்கு காய வைத்து பொடியாக்கி , டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம் . தேவைப்படும்போது ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து , அதில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை போட்டு கொதிக்க வைத்து , ஆறிய பின் குடித்து வர , சிறுநீர் எளிதாக பிரியும் . சிறுநீர்ப்பைத் தொற்று குணமாகிறது . நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் .

இன்சுலின் செடியின் இலைகளை அரைத்து , தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து முகம் , கழுத்து மற்றும் கை முட்டிகளில் பூசி வர , அந்த இடத்தின் கருமை நீங்கும் . முகத்திலுள்ள பருக்கள் மீது பூச , காய்ந்து உதிர்ந்து விடும் .

Recommended For You

About the Author: admin