இலங்கை காவல்துறைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்
இலங்கை காவல்துறைக்கு புதிய ஊடகப் பேச்சாளராக, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், காவல்துறை உதவி அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) நியமிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர், பொலன்னறுவை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) புத்திக மானதுங்கவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

