மல்வத்த மகா விகாரை: மஹிந்த ராஜபக்க்ஷவின் கோரிக்கை குறித்த செய்திகள் மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்க்ஷவின் கைது நடவடிக்கையைத் தடுக்க மல்வத்த மகா விகாரையின் தலையீட்டைக் கோரியதாக வெளியான தகவல்களை மல்வத்த மகா விகாரை மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இவ்வாறானதொரு கோரிக்கையை மல்வத்த மகா விகாரையிடம் விடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்த நிலையிலேயே இந்தத் தெளிவுபடுத்தல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மல்வத்த மகா விகாரை, இந்தச் செய்தி தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அச்செய்தியில் கூறப்பட்டது போன்று எந்தவொரு சந்திப்போ அல்லது தொலைபேசி உரையாடலோ நடைபெறவில்லை என்றும் மல்வத்த மகா விகாரை மேலும் கூறியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான தவறான தகவல்களை பரப்புபவர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

