கொழும்பு பங்குச்சந்தையில் வரலாற்றுச் சாதனை: ASPI முதன்முறையாக 18,000 புள்ளிகளைத் தாண்டியது
கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச்சுட்டியான (ASPI) இன்று (திங்கட்கிழமை) வரலாற்றில் முதன்முறையாக 18,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 260 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து, இன்றைய வர்த்தக முடிவில் 18,016.35 புள்ளிகளை எட்டியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை, இலங்கையின் பங்குச் சந்தையில் அதிகரித்து வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும், கடந்த சில மாதங்களாகக் காணப்பட்டு வரும் வலுவான வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இது இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்த நேர்மறையான எதிர்பார்ப்புகளையும், பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டையும் உணர்த்துவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

