W.M. மெண்டிஸ் & கம்பெனி இயக்குநர்கள் மீது வழக்கு – அக்டோபர் 13 அன்று ஆஜராக சம்மன்

வரி ஏய்ப்பு: W.M. மெண்டிஸ் & கம்பெனி இயக்குநர்கள் மீது வழக்கு – அக்டோபர் 13 அன்று ஆஜராக சம்மன்

W.M. மெண்டிஸ் & கம்பெனி நிறுவனத்தின் இயக்குநர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்தோனி ரன்தேவ் ஜினேந்திர ஜோன் ஆகியோர் இலங்கை அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூபா 1.035 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதி சேர் வரியை (VAT) ஏய்ப்பு செய்ததாகக் கூறி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

 

கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது, எதிர்வரும் 2025 அக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இரு பிரதிவாதிகளுக்கும் சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

2019 மற்றும் 2020 நிதியாண்டுகளுக்கான செலுத்தப்படாத பெறுமதி சேர் வரி தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வரிகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தினேஷ் பெரேரா, அரசுக்கு ஏற்பட்ட கணிசமான நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு சம்மன் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.

முன்னதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற பெறுமதி சேர் வரி மோசடி வழக்கில், இந்த இயக்குநர்கள் இருவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin