பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்.!

பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்.!

பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாஸித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் உரிய நிபந்தனைகளுக்கிணஙக சத்தியப் பத்திரம் ஒன்றை எம்.எஸ் அப்துல் வாஸித் இன்று கையெழுத்திட்டார். அவருக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம், இன்று நுவரெலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதியில், கட்சி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் வழங்கப்பட்டது.

இந்நியமனம், கட்சியின் உயர் மட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித்தரப்பினர் தெரிவித்தன.

Recommended For You

About the Author: admin