தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டி 2025: இலங்கையின் வி. வக்சன் 5000 மீட்டரில் தங்கம் வென்றார்!
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கையை சேர்ந்த வி. வக்சன், ஆண்கள் 5000 மீற்றர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இது அவருக்கான இரண்டாவது பதக்கம் ஆகும்.
ஏற்கனவே, இவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்று இலங்கையின் மானத்தைக் கூட்டியிருந்தார்.
தொடர்ந்து பதக்கங்களை வெற்றி கொண்டு வரும் வக்சனின் இந்த சாதனை, இலங்கை தடகள அணிக்காக பெருமையைத் தந்துள்ளது.

