இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி – 5 சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 371 ரன்கள் இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் (முதல் இன்னிங்ஸ்), ராகுல், ரிஷப் பண்ட் (இரண்டாவது இன்னிங்ஸ்) என மொத்தம் 5 சதங்கள் அடித்த போதிலும், பந்துவீச்சில் ஏற்பட்ட தொய்வு தோல்விக்கு வழிவகுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் டக்கட் (149), ஆலி போப் (106) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரே டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடிக்கப்பட்டும் ஒரு அணி தோல்வியடைந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

