இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் அவர்களது உரை..!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ.சுமந்திரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கல்முனை தொகுதி அமைப்பாளர் அருள்.நிதான்சன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் திருக்கோவில் தவிர்ந்த பொத்துவில், ஆலையடிவேம்பு, காரைதீவு சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய 05 சபைகளின் 24 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



