சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினருக்கு ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்..!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினருக்கு ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரை செல்லும் ஆடியவர்களுக்கு அம்பாறை மாவட்டம் குமண வனவிலங்கு சரணாலயத்தின் தொடக்க எல்லையில், அடர்ந்த வனத்திற்குள் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து, ரூபா ஒருமில்லியன் பெறுமதியான அத்தியாவசியமான உணவுப்பொருட்களை 48 வது நாளாக சந்நிதியிலிருந்து பாதயாத்திரை செல்லும் 150. பேருக்குமே பொறிகள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த பாத யாத்திரிகர்கள்
பானம கிராமம், குமண, யால தேசிய பூங்கா போன்ற இடங்களை கடந்து சுமார் 10 நாட்கள் கடினமான வனப்பகுதியை கடந்தே முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கி பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை அவர்களுக்கா நீர் விநியோகம் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான ஏறபாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த உதவிகளை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: admin